spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிகரமான 25வது நாளில் 'விடுதலை 2'!

வெற்றிகரமான 25வது நாளில் ‘விடுதலை 2’!

-

- Advertisement -
kadalkanni

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.வெற்றிகரமான 25வது நாளில் 'விடுதலை 2'! இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி விடுதலை 2 திரைப்படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி தவிர மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விடுதலை படத்தின் முதல் பாகம் சூரியை சுற்றி நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை சுற்றி நகர்கிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்திருக்கிறார். வெற்றிகரமான 25வது நாளில் 'விடுதலை 2'!விஜய் சேதுபதி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் சுமார் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் திரைக்கு வந்து இன்றுடன் (ஜனவரி 13) 25 நாட்களை எட்டி இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் வெற்றிமாறனுக்கும் மற்றும் குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வெற்றிகரமான 25வது நாளில் 'விடுதலை 2'!அந்த அறிக்கையில், “எங்கள் நிறுவனத்திற்கு விடுதலை பாகம் 2 திரைப்படமானது மிகவும் லாபகரமான படமாக அமைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். விடுதலை பாகம் 1, 2 ஆகிய படங்களை வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு வெற்றிகரமான மைல்கல். இசைஞானி ஐயா இளையராஜா அவர்களின் மனதை வருடும் இசை மற்றும் ஆழமான கதைக்கு உயிரூட்டிய பின்னனி இசைக்கு நன்றி. விடுதலை பாகம் 2 படத்தை வெற்றிகரமான படைப்பாக்கிய அனைவரது உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ