Homeசெய்திகள்சினிமா'விடுதலை 2' ரிலீஸ் இப்போதைக்கு இல்லை..... ஏன் தெரியுமா?

‘விடுதலை 2’ ரிலீஸ் இப்போதைக்கு இல்லை….. ஏன் தெரியுமா?

-

பிரபல இயக்குனர் வெற்றிமாறன், சூரி விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இளையராஜாவின் மற்ற பாடல்களை போல் ரசிகர்களை ரசிக்க வைத்தது.'விடுதலை 2' ரிலீஸ் இப்போதைக்கு இல்லை..... ஏன் தெரியுமா?விடுதலை பாகம் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ், கேன் கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.'விடுதலை 2' ரிலீஸ் இப்போதைக்கு இல்லை..... ஏன் தெரியுமா? இருப்பினும் படப்பிடிப்பு முடிந்த பாடில்லை. ஏனென்றால் வெற்றிமாறன், கதையில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறாராம். அதன்படி இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்கும் பிளாஸ்பேக் இருக்கிறதாம். அதனால் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து மாதங்களுக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனவே விடுதலை படத்தின் ரிலீஸ் இப்போதைக்கு இல்லை என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

MUST READ