விடுதலை 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை 2. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இருப்பினும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை பாகம் 2 படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து தினம் தினமும் எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்த ட்ரெய்லரில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியார் ஆகியோருக்கும் இடையிலான பிளாஷ்பேக் போர்ஷன் காண்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தது சண்டை காட்சிகளும் செண்டிமெண்ட் காட்சிகளும் காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது விடுதலை முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதை இன்னும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.