Homeசெய்திகள்சினிமாரோட்டர்டாம் விழாவில் விடுதலை படத்திற்கு கிடைத்த வரவேற்பு..... எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்!

ரோட்டர்டாம் விழாவில் விடுதலை படத்திற்கு கிடைத்த வரவேற்பு….. எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்!

-

ரோட்டர்டாம் விழாவில் விடுதலை படத்திற்கு கிடைத்த வரவேற்பு..... எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்!வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் விடுதலை பாகம் 1.  இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது.  அதைத்தொடர்ந்து வெற்றிமாறன், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக நிலவி வருகிறது.

இந்நிலையில் நெதர்லாந்தில் 53வது ரோட்டர்டாம் திரைப்பட விழா,  கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இத்திரைப்பட விழாவில் ஏராளமான படங்கள் திரையிடப்படும் நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழு மலை, வெற்றிமாறனின் விடுதலை 1, விடுதலை 2, கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

சமீபத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நேற்று வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டது. இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அனைவரும் எழுந்து நின்று தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் கைதட்டினர். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ