Homeசெய்திகள்சினிமாஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்... படத்தில் இணைந்த மாஸ் வில்லன்...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… படத்தில் இணைந்த மாஸ் வில்லன்…

-

- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அயலான். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வரும் ஜூலை மாதத்திற்குள் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ருக்மணி படத்தில் நாயகியாக நடிக்கிறார். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார்.

https://x.com/i/status/1799784103593795967

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து மாஸான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்போடு, படப்பிடிப்பு தள வீடியோவையும் படக்குழு பகிர்ந்துள்ளது. இதற்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ