Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!

நானும் ரெளடி தான் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து எல்ஐகே எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க கிரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!அடுத்தது இந்த படத்தில் இருந்து தீமா எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் எல்ஐகே திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ