சமீப காலமாக தமிழ் படங்களை விட மலையாளத் திரைப்படங்கள் அதிக வசூலை வாரிக் குவித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 2018, ஆடு ஜீவிதம், பிரம்மயுகம், மஞ்சும்மெல் பாய்ஸ், பிரேமலு போன்ற திரைப்படங்கள் வசூலில் பட்டைய கிளப்பியது. அடுத்ததாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் திரைப்படமும் அதை நாளில் வெளியான பகத் பாஸிலின் ஆவேசம் திரைப்படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்து வருகிறது. அதிலும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருந்த ஆவேசம் திரைப்படம் எட்டு நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது வரை கிட்டத்தட்ட 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார். “இந்த படத்தை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. பகத் பாசில் சார் நீங்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். மலையாள சினிமா அனைத்தையும் இந்த படம் அடித்து நொறுக்கி வருகிறது. இப்படிப்பட்ட அருமையான படத்தை எடுத்ததற்காக பட குழுவினரை வாழ்த்துகிறேன். பகத் பாஸில் சாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜித்து மாதவன் இயக்கியிருந்த ஆவேசம் திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து மன்சூர் அலிகான், சஜின் கோபு, ஆசிஷ் வித்யார்த்தி, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.