Homeசெய்திகள்சினிமாஉன்னை நினைத்து பெருமை அடைகிறேன்..... நயன்தாராவை பாராட்டிய விக்னேஷ் சிவன்!

உன்னை நினைத்து பெருமை அடைகிறேன்….. நயன்தாராவை பாராட்டிய விக்னேஷ் சிவன்!

-

- Advertisement -

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஷாருக்கான் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இந்த படத்தை கௌரிக்கான் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில்
வெளியாக இருக்கிறது.
மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிரட்டலாக இருந்தது. அதில் ஷாருக்கான் மொட்டை தலையுடன் இருக்கும் மாஸான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் விஜய் சேதுபதியின் காட்சிகள், தீபிகா படுகோன், நயன்தாரா உள்ளிட்டரின் காட்சிகள் மிரட்டலாக அமைக்கப்பட்டிருந்தது. ஹாலிவுட் ரேஞ்சில் வெளிவந்த இந்த ட்ரெய்லரை கண்டு பிரமித்து பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இதில் நயன்தாரா கூலர் சனிர்ந்து கொண்டு மாஸான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் ஆக்ஷனில் களமிறங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு பொருத்தமாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” தங்கமே உன்னை நினைத்து பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஷாருக்கானின் ரசிகராக இருந்து அவரது திரைப்படங்களை போன்ற படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று இருந்த நயன்தாரா தற்போது அவருடன் இணைந்து மிகப்பெரிய படத்தில் நடித்திருக்கிறாய். இப்போதுதான் உன் பயணம் தொடங்குகிறது. உன்னை நினைத்து நம் குடும்பம் பெருமைப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ