Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி'..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்ஐசி’….. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

-

விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி'..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருந்தாலும் நானும் ரௌடி தான் என்ற படம்தான் விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது எல்ஐசி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி'..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இதன் படப்பிடிப்புகளும் சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் எல்ஐசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகின்ற ஜூலை 25ஆம் தேதி பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒரு சில சிக்கல்களால் இந்தப் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இதன் தலைப்பை அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ