Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?

-

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் நானும் ரௌடி தான் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும் தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக இவர் அஜித்தை வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பாக கோமாளி, லவ் டுடே ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பிரதிப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?

மேலும் இவர்களின் கூட்டணியில் எஸ் ஜே சூர்யா மற்றும் மிஸ்கின் ஆகியோரும் இணைய இருப்பதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் அதனை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?

இந்நிலையில் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ