Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவனின் 'எல்ஐகே'..... கிரித்தி ஷெட்டி போஸ்டர் வெளியீடு!

விக்னேஷ் சிவனின் ‘எல்ஐகே’….. கிரித்தி ஷெட்டி போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

எல்ஐகே படத்தின் கிரித்தி ஷெட்டி போஸ்டர் வெளியாகி உள்ளது.விக்னேஷ் சிவனின் 'எல்ஐகே'..... கிரித்தி ஷெட்டி போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே LOVE INSURANCE KOMPANY என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவனின் 'எல்ஐகே'..... கிரித்தி ஷெட்டி போஸ்டர் வெளியீடு!இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ் ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி, சீமான் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது டைம் டிராவல் சம்பந்தமான கதை களத்தில் காதல் படமாக உருவாகி வருகிறது.விக்னேஷ் சிவனின் 'எல்ஐகே'..... கிரித்தி ஷெட்டி போஸ்டர் வெளியீடு! கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அடுத்ததாக நடிகை கிரித்தி ஷெட்டியின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ