திரையுலகில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நட்சத்திர தம்பதியாக வலம் வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒரு பக்கம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது எல்ஐகே எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் எவ்வளவுதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தங்களின் இரட்டை மகன்களுடன் நேரம் செலவிடுவதை தவறுவதே இல்லை. அதன்படி அவ்வப்போது தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்கள். அதேபோல் தற்போது நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் டெல்லியில் ரோட்டோர கடையில் உணவருந்தி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த பதிவில், “பல வருடங்களில் நவம்பர் 17 அன்று மாலை சின்னதாக பிறந்தநாள் கொண்டாட்டம். அந்த இரவு உணவு மிகவும் நெருக்கமாகவும் தனிப்பட்டதாகவும் ருசியாகவும் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் மாறி மாறி உணவை ஊட்டிவிட்டு மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.