சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதைத்தொடர்ந்து நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது அடுத்த படத்தை கோமாளி, லவ் டுடே உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான பிரதிப் ரங்கநாதன் நடிப்பில் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு எல்ஐசி (LIC -LOVE INSURANCE CORPORATION )என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தின் கதையானது நடிகர் சிவகார்த்திகேயனுக்காக எழுதப்பட்டதாகவும் சிவகார்த்திகேயனின் 17 வது படமாக உருவாக இருந்த இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தை 2019-ல் தொடங்கி 2020இல் ரிலீஸ் செய்ய விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
எனவே தற்போது சிவகார்த்திகேயனுக்காக எழுதப்பட்ட இந்த கதையில் பிரதீப் ரங்கநாதன் எப்படி நடிக்கப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.