தெறி இந்தி ரீமேக் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
அட்லீ ‘ராஜா ராணி‘ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து விஜய் உடன் கூட்டணி வைத்த தெறி படம் தான் அட்லீயை பெரிய மாஸ் இயக்குனராக உருவெடுக்கச் செய்தது.
விஜயின் சினிமா கேரியரில் தெறி படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மூன்று கெட்டப்புகளில் வந்து மாஸ் காட்டி இருந்தார் விஜய். சூப்பர் ஹிட் ஆன தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.
பாலிவுட் நடிகர் வருண் தவான் தெறி இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கீ படத்தை இயக்கிய இயக்குனர் காளீஸ் இயக்க இருப்பதாகக்கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் அட்லீயே அந்தப் படத்தை தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல். இந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.