லியோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி உள்ள திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளனர். அதனால் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் லியோ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
Unleashing my @actorvijay na in a never seen before avatar 🔥💯#LeoTrailer
Tamil: https://t.co/yVnAVolBUh
Telugu: https://t.co/ppRRPK6TLX
Kannada: https://t.co/zvrRp1yvB7#LeoFromOctober19#LEO 🔥🧊
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 5, 2023
இந்த ட்ரெய்லர் இவ்வளவு நாள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவே அமைந்துள்ளது எனலாம். அந்த அளவிற்கு இந்த ட்ரெய்லரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகப்படுத்துகின்றன. மாஸான பின்னணி இசை உடன் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
மனைவி, குழந்தை என வாழும் விஜயின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் மிரட்டலாக தயாராகியுள்ளது என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். உறுதியாக லியோ படம் 500 கோடியை தட்டி தூக்கி விடும் என்று பலரும் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.