விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் தவிர மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ஹிட்லர். செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படைவீரன், வானம் கொட்டட்டும், ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கி உள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிடோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம்ரவி படத்தின் டீசரை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது டிரெண்டாகி வருகிறது.