Homeசெய்திகள்சினிமாஅருவி பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி.... படப்பிடிப்பு தீவிரம்!

அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி…. படப்பிடிப்பு தீவிரம்!

-

கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அருவி. இந்த படத்தில் அதிதி பாலன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி.... படப்பிடிப்பு தீவிரம்!இந்த படமானது வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. அதாவது மலையிலிருந்து விழும் ஆறு தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்துச் செல்லும் போது அதே வழியில் உள்ள மேடு பள்ளங்களை நிரப்பி வழி முழுவதும் வளமாக்கி இறுதியில் உச்சியில் இருந்து அருவியாக விழும். அதுபோலவே ஒரு பெண் தனது வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை எல்லாம் அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து அனைவரையும் மனதளவில் நல்ல மனிதராக்கி இறுதியில் மறைந்து போய்விடுவாள். படத்தின் கன்டென்ட்டிற்கும் தலைப்பிற்கும் அவ்வளவு பொருத்தம். ஆனால் இதைத்தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்த வாழ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி.... படப்பிடிப்பு தீவிரம்!அடுத்ததாக அருண் பிரபு புருஷோத்தமன், விஜய் ஆண்டனி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தகவல் கசிந்து இருந்தது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சத்தமே இல்லாமல் இதன் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் 2025 கோடை காலத்தில் இந்த படம் வெளியாகும் எனவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ