பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தில் வெற்றிக்கு பிறகு பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து பிச்சைக்காரன் மூன்றாம் பாகத்தையும் இயக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் விஜய் ஆண்டனி வள்ளி மயில் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள கொலை திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், அர்ஜுன் சிதம்பரம், மீனாட்சி சவுத்ரி, முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், டேபிள் ப்ராஃபிட், லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார். க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இதற்கு இசை அமைத்துள்ளார்.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சமீபத்தில் இந்த படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 10ஆம் தேதி சத்யம் சினிமாஸ் அரங்கத்தில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.