Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை..... ரிலீஸ் தேதி அப்டேட்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை….. ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலை வாரி குடித்தது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் மூன்றாம் பாவத்தையும் இயக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.அந்த வகையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி, கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் கொலை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், டேபிள் ப்ராஃபிட், லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி டிடெக்டிவ் ஏஜென்ட் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ