Homeசெய்திகள்சினிமாபோலீஸாக நடிக்கும் விஜய் ஆண்டனி..... 'ககன மார்கன்' பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

போலீஸாக நடிக்கும் விஜய் ஆண்டனி….. ‘ககன மார்கன்’ பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போலீஸாக நடிக்கும் விஜய் ஆண்டனி..... 'ககன மார்கன்' பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் கடைசியாக ஹிட்லர் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வரும் விஜய் ஆண்டனி, ககன மார்கன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தினை அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, பீட்சா, சூது கவ்வும் ஆகிய படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்குகிறார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தினை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.போலீஸாக நடிக்கும் விஜய் ஆண்டனி..... 'ககன மார்கன்' பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்! இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சமுத்திரக்கனி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் கடந்து சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.போலீஸாக நடிக்கும் விஜய் ஆண்டனி..... 'ககன மார்கன்' பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்! மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் விஜய் ஆண்டனி இந்த படத்தில் மர்மமான கொலைகளை கண்டறியும் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறாராம். போலீஸாக நடிக்கும் விஜய் ஆண்டனி..... 'ககன மார்கன்' பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!அடுத்தது இந்த படத்தில் தமிழ் மரபுகள் மற்றும் புராணங்கள் சம்பந்தமான காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சிகள் பிஎஃப்எக்ஸ் மூலம் உருவாக்கி வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இனிவரும் நாட்களில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ