Homeசெய்திகள்சினிமாபெண்கள் மது அருந்துவது குறித்து பேசிய விஜய் ஆண்டனி!

பெண்கள் மது அருந்துவது குறித்து பேசிய விஜய் ஆண்டனி!

-

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி ஏற்கனவே சலீம், பிச்சைக்காரன், அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெண்கள் மது அருந்துவது குறித்து பேசிய விஜய் ஆண்டனி!கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் உள்ளிட்ட படங்கள் வெளியானது. இருப்பினும் எந்த படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்ததாக ரொமான்டிக் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதன்படி ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் மது அருந்துவது குறித்து பேசிய விஜய் ஆண்டனி! இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி நடித்துள்ளார். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து சமீப காலமாக படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களையும் பாடல்களையும் பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதே சமயம் இந்த படம் 2024 ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மது அருந்துவது குறித்து பேசிய விஜய் ஆண்டனி!இந்நிலையில் ரோமியோ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனியிடம் பெண்கள் மது அருந்துவது சரியா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி, “ஆண்கள், பெண்கள் என வேறுபடுத்தி பார்க்க வேண்டாம். நான் மது அருந்துவதை ஆதரிப்பது கிடையாது. ஆண்களை மது குடிக்க வேண்டாம் என்று சொன்னால் அது பெண்களுக்கும் தான் பொருந்தும்” என்று பதில் அளித்துள்ளார்.

MUST READ