Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தன்னுடைய படங்களுக்கு தானே இசை அமைத்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இதற்கிடையில் இவர் ஹிட்லர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை வானம், படைவீரன், உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கியுள்ளார். செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க விவேக் -மெர்வின் இசையமைத்துள்ளனர். நவீன் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ