Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் 'ஹிட்லர்'....டீசர் ரிலீஸ் அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ‘ஹிட்லர்’….டீசர் ரிலீஸ் அறிவிப்பு!

-

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் 'ஹிட்லர்'....டீசர் ரிலீஸ் அறிவிப்பு!பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்த வருகிறார். அந்த வகையில் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் கொலை, ரத்தம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.இப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் வள்ளி மயில் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

அதன்படி ஹிட்லர் எனும் திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படத்தை தனா எழுதி இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, ரியா சுமன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் 'ஹிட்லர்'....டீசர் ரிலீஸ் அறிவிப்பு!இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இந்த டீசரை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ