விஜய் ஆண்டனி நடிக்கும் ரோமியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் வள்ளி, ஹிட்லர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
இதற்கிடையில் விஜய் ஆண்டனி, விநாயக் வைத்தியநாதன் இயக்கும் ரோமியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி ரவி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனியே இப்படத்தை தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் ஆண்டனி, பால் சொம்புடன் இருக்க மிர்நாலினி, சரக்கு பாட்டிலுடன் இருப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2024 கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.