Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' பட ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ பட ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு!

-

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' பட ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு!

விஜய் ஆண்டனி கடைசியாக ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் இவர் ஹிட்லர், வள்ளி மயில் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சரத்குமார், மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' பட ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு! மேலும் நடிகர் சத்யராஜும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இன்ஃபினிட்டி பிலிம் வென்சஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஜய் மில்டன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது கடந்த சில வருடங்களாகவே ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படம் நாளை (ஆகஸ்ட் 2ம் தேதி) திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

MUST READ