விஜய் ஆண்டனியின் ரோமியோ… புதிய பாடல் வெளியீடு…
- Advertisement -
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ரோமியோ படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.

நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. கோலிவுட் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்து, 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் இருக்கிறார். இசை அமைப்பாளராக கோலிவுட்டில் கோட்டை கட்டிய விஜய் ஆண்டனியின் கவனம், நடிப்பின் பக்கம் திரும்பியது. நான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், யமன், அண்ணாதுரை, கொலைகாரன், கொலை, ரத்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர், வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

இதற்கிடையே, அவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரோமியோ. விநாயகர் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி ரவி நடித்திருக்கிறார். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெத்தல எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.