Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை..... போலீசார் விசாரணை!

விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை….. போலீசார் விசாரணை!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி , பிரபல நடிகரும் இசை அமைப்பாளரும் ஆவார். இவருக்கு 16 வயதில் மீரா என்ற மகள் இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது இவர் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டில் உள்ள உதவியாளர்களுடன் மீராவை காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் மகள் மீரா ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ