நடிகர் விஜய் ஆண்டனி கொலை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ், டேபிள் பிராஃபிட், லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை இப்படத்தின் தலைப்பே கூறுகிறது. அதாவது படத்தில் ஒரு கொலை நடக்கிறது அதை யார் செய்தது? அதன் பின்னணி என்ன? என்பதை கண்டறிவதை இப்படத்தின் முழு நீள கதையாகும்.
மீனாட்சி சவுத்ரி ஒரு மாடல் அழகியாக நடித்துள்ளார். இவர் தனது அப்பார்ட்மெண்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரித்திகா சிங் நியமிக்கப்படுகிறார். இவருடன் திறமையான முன்னாள் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியும் இந்த வழக்கில் நியமிக்கப்படுகிறார். இருவரும் இணைந்து கொலை செய்த குற்றவாளியை தேடுகின்றனர். அதனால் மீனாட்சி சவுத்ரிக்கு நெருக்கமானவர்களான மாடல் ஏஜென்ட் முரளி ஷர்மா, மேனேஜர் கிஷோர் குமார், போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோரின் மேல் சந்தேகம் விழுகிறது. இவர்களின் யாரேனும் மீனாட்சி சௌத்திரியை கொலை செய்திருப்பார்களா என்ற பாதையில் விசாரணை நடைபெறுகிறது.
இதில் கொலையாளியை கண்டுபிடிக்கும் காட்சிகள் வழக்கமான படங்களில் காட்டப்படுவது போல் இருந்தாலும் இதில் சற்று வித்தியாசமாக யூனிக்கான ஸ்டைலில் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படமானது ஒரு ஹாலிவுட் கிரைம் திரில்லர் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி முந்தைய படங்களில் நடிப்பது போன்று நடித்திருந்தாலும் இந்த படத்தில் தனது ஹேர் ஹேர் ஸ்டைலை மாற்றி சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்திகா சிங் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் தனக்கேற்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துக் காட்டியுள்ளார். ராதிகா சரத்குமாரின் காட்சிகள் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கின்றன. ஆனாலும் வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மீனாட்சி சவுத்ரி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருத்தமாக நடித்துள்ளார். குறிப்பாக மீனாட்சி சவுத்ரியன் மேனேஜர் கிஷோர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குனர் பாலாஜி குமார் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தை இயக்கி இருந்தாலும் ஆட்சி அமைப்புகளில் மிரட்டியுள்ளார். படமானது ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் அதற்கேற்ப ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் மற்றும் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களால் முடிந்த ஒத்துழைப்பை தந்துள்ளனர். படத்தின் முதல் பாதி சுவாரசியத்துடனும் வேகமாகவும் செல்கிறது. அதே சமயம் இரண்டாம் பாதியில் சில தடைகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் இல் கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத அளவில் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. எனினும் ஏமாற்றம் அளிக்காத திரைக்கதை அமைந்தாலும் எடிட்டிங் இன்னும் நன்றாக அமைந்திருக்கலாம்.