Homeசெய்திகள்சினிமா'லக்கி பாஸ்கர்' பட பாணியில் உருவாகும் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்'?

‘லக்கி பாஸ்கர்’ பட பாணியில் உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’?

-

- Advertisement -

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படம் லக்கி பாஸ்கர் பட பாணியில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.'லக்கி பாஸ்கர்' பட பாணியில் உருவாகும் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்'?

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது ககன மார்கன், வள்ளி மயில் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சக்தித் திருமகன் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இதற்கு இசையும் அமைக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி தவிர திருப்தி ரவீந்திரா, கிரண், வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலினி, செல் முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் ஆண்டனியின் 25வது படமான இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'லக்கி பாஸ்கர்' பட பாணியில் உருவாகும் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்'?இந்நிலையில் இந்த படமானது கடந்தாண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை போல் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தித் திருமகன் படத்தின் டீசரை பார்க்கும்போது இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைக்களம் போல் தெரிந்தது. இருப்பினும் இந்த படம் அரசியல் கலந்த க்ரைம் திரில்லர் படமாக இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MUST READ