விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது சிவா நிர்வனா இயக்கத்தில் குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார்.
மகாநதி படத்திற்குப் பிறகு இந்த காம்போ மீண்டும் இணைந்துள்ளது.
ரொமான்டிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கப் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, ரோகினி, லட்சுமி, ஸ்ரீகாந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
காஷ்மீர், கேரளா, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்தது.
படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
On SEPT 1st
We bring to the world
Full #Kushi ❤️https://t.co/gTnd1GJFMj#KushiTrailer pic.twitter.com/k6AzAT3i8e— Vijay Deverakonda (@TheDeverakonda) August 9, 2023
இந்த ட்ரெய்லரில் சமந்தா முதலில் முஸ்லிமாக காட்டப்படுகிறார். அவரை விஜய் தேவர் கொண்டா காதலிக்கிறார். பின் ஒரு கட்டத்தில் சமந்தா தான் முஸ்லிம் அல்ல என்பதையும் பிராமின் என்பதையும் தெரிவிக்கிறார். பின் இருவரின் பெற்றோர்களும் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில்
இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர் அதன் பின் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை இந்த டைலரின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக படுத்தி உள்ளது.