Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா, சமந்தா கூட்டணியின் 'குஷி'...... ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழுவினர்!

விஜய் தேவரகொண்டா, சமந்தா கூட்டணியின் ‘குஷி’…… ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழுவினர்!

-

விஜய் தேவரகொண்டா, சமந்தா கூட்டணியில் உருவாகி வரும் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குஷி. இருவரும் மகாநதி படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா வுடன் இணைந்து ஜெயராம், முரளி சர்மா, லக்ஷ்மி, ரோகினி, ஸ்ரீகாந்த், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடிக்கின்றனர். வித்தியாசமான காதல் கதையில் உருவாகி வரும் இந்த படத்தை சிவா நிர்வனா இயக்கியுள்ளார்.

மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து வெளியான படத்தின் முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், கேரளா, ஹைதராபாத் என பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ