Homeசெய்திகள்சினிமாபேமிலி ஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

பேமிலி ஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

-

- Advertisement -
பேமிலி ஸ்டார் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குஷி. கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பட வசூலில் கிடைத்த பணத்தையும் நடிகர் விஜய் தேவரகொண்டா 100 குடும்பங்களுக்கு பிரித்து வழங்கினார். இப்படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடிப்பில் ‘கீதா கோவிந்தம்’ என்னும் திரைப்படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த புதிய படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஃபேமிலி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சீதாராமம் படத்தின் மூலம் பிரபலமான மிர்ணாள் தாகூர் நடிக்கிறார்.

இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இத்திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது

MUST READ