Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டாவின் அன்பு "கஸ்டடி"- யில் சமந்தா... வைரலாகும் க்யூட் வீடியோ

விஜய் தேவரகொண்டாவின் அன்பு “கஸ்டடி”- யில் சமந்தா… வைரலாகும் க்யூட் வீடியோ

-

குஷி படத்தின் படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவிடம் அன்பை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது சமந்தா குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார்.

சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ஏற்கனவே மகாநதி படத்தில் துணை கதாபாத்திரங்களாகவும் காதல் ஜோடிகள் ஆகவும் நடித்திருந்தனர். தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குஷி படத்தை மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இயக்குனர் சிவா நிர்வனாஇந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக இத் திரைப்படத்தின் “நா ரோஜா நுவே” எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், கேரளா, ஹைதராபாத் என பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் இன்று படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா சமந்தா மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் சமந்தாவிற்கே தெரியாமல் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்களும் குஷியாக பகிர்ந்து வருகின்றனர்.

 

MUST READ