Homeசெய்திகள்சினிமாதில் ராஜூவுடன் இணைந்த விஜய் தேவரகொண்டா... போஸ்டருடன் அறிவிப்பு...

தில் ராஜூவுடன் இணைந்த விஜய் தேவரகொண்டா… போஸ்டருடன் அறிவிப்பு…

-

- Advertisement -
தெலுங்கில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் தன் திறமையால் மட்டுமே, இன்று இந்தியாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி பின்னர் டோலிவுட் திரையில் அறிமுகமாகினார். அவர் நடித்த பெல்லிசோப்புலூ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து விஜய் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.

தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றி விஜய் தேவரகொண்டாவை முன்னணி நடிகராக முன்னிறுத்தியது. லிகர் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரித்து இருந்தார். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பேமிலி ஸ்டார் வெளியானது.

மேலும், இரண்டு திரைப்படங்களில் விஜய் தேவரகொண்டா கமிட்டாகி உள்ளார். அதன்படி, தில் ராஜூ இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தை, ரவிகிரண் கோலா இயக்குகிறார். தில் ராஜூவுடன் விஜய் தேவரகொண்டா இணையும் இரண்டாவது படம் இதுவாகும். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ