Homeசெய்திகள்சினிமாவெளியானது 'லியோ' ட்ரெய்லர்..... தியேட்டரையே நார் நாராக கிழித்த ரசிகர்கள்!

வெளியானது ‘லியோ’ ட்ரெய்லர்….. தியேட்டரையே நார் நாராக கிழித்த ரசிகர்கள்!

-

விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் திசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக நிலவி வருகிறது. அதன்படி சில தினங்களாக அடுத்தடுத்த போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டினர். இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் நேற்று லியோ படத்தின் டிரைலர் மாலை 6.30 மணி அளவில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என பெரிய திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. அந்த வகையில் சென்னை ரோகினி திரையரங்கில் திரையிடப்பட்ட லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். அப்போது அவர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் திரையரங்கு இருக்கைகளை கிழித்தும், உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ