ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் படத்தின் இயக்குநரான லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.
தொடர்ந்து மற்ற மாநிலங்களில் படம் அதிகாலையே வெளியிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ குறித்த விமர்சனத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாளில் மட்டும் 130 கோடி ரூபாய்க்கு மேல் லியோ வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இதனிடையே, காமராஜர் சாலையில் விஜய் ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி பணிக்குச் செல்லும் நேரம் என்பதால், வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. திரையரங்கிற்குள் காலை 8.30 மணிக்கு பிறகே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அவர்கள் தாங்கள் வந்த வண்டிகளை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். இதனிடையே விதிகளை மீறி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட விஜய் ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.