2026-ன் தமிழக முதல்வர் தளபதி விஜய் தான் என்று அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலர் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் முதல் கமல் வரை தற்போது அரசியலில் முத்திரை பதித்து வருகின்றனர்.
தற்போது தளபதி விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ‘மதுரையில் விரைவில் மாநாடு’ என மதுரையில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
விஜயும் அவர் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் சம்பந்தமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி, தான் அரசியலில் நுழையப் போவதை உறுதிப்படுத்தி வருகிறார். தன்னுடைய மக்கள் இயக்க உறுப்பினர்களையும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கருடைய பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் நேரில் சென்று அம்பேத்கருடைய சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பின்படி அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் விஜய் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது, நீட் தேர்வால் உயிர் இழந்த அனிதாவின் வீட்டிற்கு சென்றது, பண மதிப்பிழப்பில் விஜய் கண்டனம் தெரிவித்தது, இவ்வாறான பல நிகழ்வுகள் விஜய் அரசியலில் நுழைய தொடங்கி விட்டார் என்ற வகையில் அமைந்திருக்கிறது.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட இவரது ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். அதிலிருந்து விஜய், தனது புகைப்படங்களையும் பெயரையும் விஜய் மக்கள் இயக்கம் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.
மேலும் விஜய் மக்கள் இயக்க தலைவரான புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களை சந்தித்த போது ரசிகர்கள் அனைவரும் வருங்கால ‘முதலமைச்சர் தளபதி வாழ்க, ‘துணை முதலமைச்சர் ஆனந்த் வாழ்க’ என்று கோஷமிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் மதுரை முழுவதிலும் “ஜூன் 22 பிறந்தநாள் விழா காணும் ,
2024 பாராளுமன்றமே 2028 தமிழக சட்டமன்றமே” எனவும் “தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியே நாடு” எனவும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
எனவே இதன் மூலம் மதுரையில் விரைவில் மாநாடு நடக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் விஜய் 2026 தேர்தலில் போட்டியிடுவார் என்றும் விஜயின் தொண்டர்கள் உறுதியாக கூறுகின்றனர்.