நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கோட் ( தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். டி ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் தளபதி விஜய், இளைய தளபதியாக காட்டப்பட்டுள்ளார். இளைய தளபதியை காண்பதற்காகவே ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி கோலாகலமாக இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது கோட். இந்த படத்தை காண நீண்ட நாள் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா? என்பதை விமர்சனமாக பார்க்கலாம்.
ஸ்பெஷல் ஆன்ட்டி டெரரிஸ்ட் ஸ்குவாட்- இன் தலைவராக காந்தி என்ற பெயரில், விஜய் நடித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத கும்பல்கள் நடத்தும் சூழ்ச்சிகளை விஜய் மற்றும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இணைந்து முறியடிக்கின்றனர். இந்நிலையில் தான் நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் பாங்காக்கிற்கு டூர் செல்கிறார். அப்போது ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட தனது மகனை இழந்து விடுகிறார். அதைத் தொடர்ந்து அந்த அமைப்பை வேண்டாம் என்று இமிகிரேஷன் அதிகாரியாக தனது மீதமுள்ள வா வாழ்க்கையை கடக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் மீண்டும் அந்த அமைப்பில் இணைய வேண்டிய சூழல் விஜய்க்கு ஏற்பட அப்போதுதான் அவருக்கு பெயர்ச்சி காத்திருக்கிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
வழக்கம்போல் நடிகர் விஜய் தனது நடிப்பினாலும் நடனத்தினாலும் படம் முழுவதையும் தாங்கி பிடித்துள்ளார். அதிலும் டபுள் ஆப்ஷனில் தெறிக்க விட்டுள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், சினேகா
ஆகியோரும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகின்றனர். இடையிடையில் வரும் ட்விஸ்டுகள் படத்தை சுவாரசியமாக கொண்டு செல்கிறது. இளமையான விஜய் இந்த படத்தில் ஜீவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம் விஜய் வரும் இடங்கள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக இருந்தாலும் சில இடங்களில் டி ஏஜிங் செய்திருப்பது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இருப்பினும் படத்தில் இடம்பெற்ற காமெடிகள், சண்டை காட்சிகள் போன்றவை சலிப்பை ஏற்படுத்தாமல் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. அதேபோல் இசையும் ஒளிப்பதிவும் ஒர்க் அவுட்டாகி இருக்கிறது.
அடுத்தது ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்தின் கேமியோ, கிளைமாக்ஸ்-இல் வரும் கேமியோ போன்றவை திரையரங்கத்தையே அதிர வைத்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம் தந்துள்ளது. ஆக மொத்தத்தில் விஜய் ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் கோட் படத்தை தளபதி திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.