நடிகர் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அடுத்ததாக நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தளபதி 69 படமானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய், தளபதி 69 படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி வருகிறது. அதாவது ராஜா ராணி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் இயக்கியிருந்த ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை அள்ளியது. அடுத்தது இவர் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதன் புதிய தகவல் என்னவென்றால், சல்மான் கான், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். அதே சமயம் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கும் நடனமாட இருக்கிறாராம் விஜய். இது தொடர்பாக விஜயிடம் பேசியபோது விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த புதிய படத்தினை ஏ ஃபார் ஆப்பிள், சன் பிக்சர்ஸ், ஜியோ ஸ்டூடியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
நடிகர் விஜய், தளபதி 69 திரைப்படத்துடன் சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.