Homeசெய்திகள்சினிமாவிஜயின் அடுத்த மூவ்..... ஒவ்வொரு மாவட்டத்திலும் மாலை நேர பள்ளிகளை திறக்க முடிவு!

விஜயின் அடுத்த மூவ்….. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாலை நேர பள்ளிகளை திறக்க முடிவு!

-

- Advertisement -

தளபதி விஜயின் 49 வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாள் அன்று அவருடைய ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். ஒரு நடிகரின் பிறந்த நாளை போல் இல்லாமல் தனது குடும்பத்தில் ஒருவரது பிறந்தநாள் போலவே ஒவ்வொரு வருடமும் விஜயின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அதிலும் இந்த ஆண்டு அவருடைய பிறந்தநாள் மிகவும் சிறப்பான விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. அடுத்தடுத்து வெளியாகி வந்த லியோ படத்தின் அப்டேட்டுகள் ,ஃபர்ஸ்ட் லுக் ஃபர்ஸ்ட் சாங் மற்றும் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியது என ஒரு வாரம் முழுவதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

இந்த பிறந்தநாள் வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் கல்விக்கு முக்கியம் அளிக்கும் வகையில் ஒரு புதிய நலத்திட்டத்தினையும் செயல்படுத்த உள்ளனர்.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது மேலும் அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பள்ளிகள் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் பள்ளிக்கு செல்ல இயலாத குழந்தைகள் மாலையில் இப்பள்ளிகளில் வந்து பாடம் கற்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களே இப்பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

MUST READ