Homeசெய்திகள்சினிமாமாற்றுத்திறனாளி ரசிகரைக் கண்டு விஜய் செய்த நெகழ்ச்சி செயல்!

மாற்றுத்திறனாளி ரசிகரைக் கண்டு விஜய் செய்த நெகழ்ச்சி செயல்!

-

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். மாற்றுத்திறனாளி ரசிகரைக் கண்டு விஜய் செய்த நெகழ்ச்சி செயல்!படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அதாவது கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். அங்கு தொடர்ந்து பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து விஜய்யை காண வந்த கேரள ரசிகர்களை சந்தித்து பேசினார் விஜய். ரசிகர்களும் விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்று விஜய்க்கு மாலை அணிவிப்பது அவருடன் புகைப்படங்கள் எடுப்பது ஆட்டோகிராப் வாங்குவது என விஜய் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அளவிற்கு விஜயை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்  படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் விஜய்யை காண மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் காத்திருந்தார். அந்த ரசிகரை கண்ட விஜய் அவருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ