Homeசெய்திகள்சினிமாதமிழக வெற்றி கழக தலைவராக ரசிகர்களை சந்தித்த விஜய்!

தமிழக வெற்றி கழக தலைவராக ரசிகர்களை சந்தித்த விஜய்!

-

- Advertisement -

தமிழக வெற்றி கழக தலைவராக ரசிகர்களை சந்தித்த விஜய்!நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும் , 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்தச் செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அந்த வகையில் இதனை விஜய் ரசிகர்கள் பலரும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினர். எனவே விஜய் அரசியல் வருகையை வரவேற்று அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

அதே சமயம் விஜய் The Greatest Of All Time படப்பிடிப்பு தளத்தில் தன்னைக் காண வந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு கை அசைத்து தனது அன்பினை பகிர்ந்தார். அதுமட்டுமில்லாமல் விஜயின் அரசியல் அறிவிப்புக்கு பின் தமிழக வெற்றி கழக தலைவராக ரசிகர்களை சந்தித்த நிலையில், ரசிகர்கள் சிலர் விஜய்க்கு மாலைகளை வீசி எறிந்தனர். அந்த மாலையை மகிழ்ச்சியாக தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மீண்டும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர். இது சம்பந்தமான வீடியோக்களும் புகைப்படங்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ