Homeசெய்திகள்சினிமாசூர்யாவுடன் நடிக்க விரும்பும் விஜய் பட நடிகை!

சூர்யாவுடன் நடிக்க விரும்பும் விஜய் பட நடிகை!

-

பிரபல நடிகை ஒருவர் சூர்யாவுடன் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.சூர்யாவுடன் நடிக்க விரும்பும் விஜய் பட நடிகை!நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரின் மகன் என்று அடையாளத்துடன் நுழைந்திருந்தாலும் தனது திறமையினாலும் கடின உழைப்பினாலும் தற்போது உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிப்பின் நாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது கங்குவா, சூர்யா 44 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ளார் சூர்யா. இந்நிலையில் பிரபல நடிகை மாளவிகா மோகனன், சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகை மாளவிகா மோகனனின் விஜயின் மாஸ்டர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் மாளவிகா மோகனனிடம் எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் சூர்யா குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், “சூர்யா மிகவும் இனிமையானவர். அவருடன் விரைவில் பணியாற்ற விரும்புகிறேன். அவருடைய கண்கள் அழகான எக்ஸ்பிரஸன்களை வெளிப்படுத்தும். தங்கலான் திரைப்படமும், கங்குவா திரைப்படமும் பிளாக்பஸ்டராக மாறும் என்று நம்புகிறேன். கங்குவா படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ