Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... கதாநாயகி யார்?

விஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. கதாநாயகி யார்?

-

- Advertisement -

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.விஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... கதாநாயகி யார்? அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் பெருமாள் வாத்தியாராக நடித்திருக்கும் விஜய் சேதுபதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி அடுத்தடுத்த புதிய படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். விஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... கதாநாயகி யார்?அதன்படி அடுத்தது சாமி, சிங்கம் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. விஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... கதாநாயகி யார்?இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை நயன்தாராவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகை நயன்தாரா விஜய் சேதுபதி உடன் இணைந்து நானும் ரெளடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ