Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர் ஏஸ், ட்ரெயின், காந்தி டாக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அதேபோல் நடிகை நித்யா மேனன் கடைசியாக காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர், தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, செம்பன் வினோத், சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார்.விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படமானது 2025 கோடையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ