Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி - சசிகுமார் நடிக்கும் புதிய படம்.... ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி!

விஜய் சேதுபதி – சசிகுமார் நடிக்கும் புதிய படம்…. ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி!

-

- Advertisement -

விஜய் சேதுபதி – சசிகுமார் காம்போவில் புதிய படம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விஜய் சேதுபதி - சசிகுமார் நடிக்கும் புதிய படம்.... ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் தற்போது ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்தது பூரி ஜெகன்நாத் இயக்கத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதேசமயம் நடிகர் சசிகுமார் மீண்டும் இயக்குனராக மாறப் போகிறார் என்றும் வெப் தொடர் ஒன்றை இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.விஜய் சேதுபதி - சசிகுமார் நடிக்கும் புதிய படம்.... ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி! இதற்கிடையில் டூரிஸ்ட் ஃபேமிலி, மை லார்ட், ஃப்ரீடம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியும், சசிகுமாரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கப் போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகிய இருவரும் இணைந்து சுந்தரபாண்டியன் படத்தில் நடித்திருந்தனர். அடுத்தது ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்திருந்தனர். ஆனால் இந்த படத்தில் இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கும் தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது கூட்டணியிலான புதிய படத்தினை எதிர்நீச்சல், கொடி, கருடன் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.விஜய் சேதுபதி - சசிகுமார் நடிக்கும் புதிய படம்.... ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி!

துரை செந்தில்குமார் தற்போது லெஜெண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் விஜய் சேதுபதி- சசிகுமார் காம்போவில் புதிய படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் துரை செந்தில்குமார், நயன்தாராவின் 81வது திரைப்படத்தை இயக்குவதற்கும் கமிட்டாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ