விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் பாண்டிராஜ். இவரது நடிப்பில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்து வருகிறார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனை விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இந்த படத்தில் பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறேன். இதில் தர்பூசணி பரோட்டா, அண்ணாசி பரோட்டா, பரோட்டா பொங்கல் என்ன வித்தியாசமாக சமைக்கும் சமையல் மாஸ்டராக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -