கடந்த ஜூலை 14ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி, சங்கர் யோகி பாபு, சரிதா, மிஸ்கின் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஃபேண்டஸி கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அசரீரியின் குரல் ஒலித்தது. அதற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் மாவீரன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என்றும் கூறலாம்.
இந்நிலையில் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏலியன் சம்பந்தமான கதைக்களத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த படம் பல சிக்கல்களுக்கு மத்தியில் விரைவில் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கண்டிப்பாக ஸ்பெஷலான ஒரு நடிகர் தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் இது சம்பந்தமான விடை கிடைக்க பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக அயலான் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.