நடிகர் ஆர். ஜே. பாலாஜி ஏற்கனவே எல் கே ஜி, வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். விவேக் சிவா இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. நேற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் அட்டகாசமான ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த ட்ரெய்லரில் காமெடி, எமோஷன்ஸ், காதல் என அனைத்துமே காட்டப்பட்டது. அதேசமயம் சிங்கப்பூர் சலூன் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், நடிகர் ஜீவாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி உள்ளது. இந்நிலையில் மற்றொரு ஹாலிவுட் நடிகரும் கேமியா ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி இதில் கேமியா ரோலில் நடித்துள்ளதாகவும் படக்குழுவினர் அதை சர்ப்ரைஸாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியும் ஆர் ஜே பாலாஜியும் நல்ல நண்பர்கள் அதே சமயம் நானும் ரவுடிதான் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஜய் சேதுபதி, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர் ஜே பாலாஜிக்காக கேமியோ ரோலில் நடித்திருக்கலாம் இன்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.