Homeசெய்திகள்சினிமாமீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

-

- Advertisement -

மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!அஜய் ஞானமுத்து டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் கூட்டணியில் படத்தை இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அஜய் ஞானமுத்து டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கின்றன. அதே சமயம் கடந்த சில தினங்களாக அஜய் ஞானமுத்து, பூஜா ஹெக்டே நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விஜய் சேதுபதி தரப்பில் இது குறித்து உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

ஏற்கனவே இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கேமியா ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோப்ரா திரைப்படத்திலும் விஜய் சேதுபதியை கேமியா ரோலில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டதாம். ஆனால் விஜய் சேதுபதிக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தால் அவரால் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிய வந்துள்ளது.

MUST READ